பெண்களின் கண்கள் பல இரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு மர்மமும். ஆச்சரியமும். அதிசயமும் நிறைந்த ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த கண்களுக்கு பின்னால் இருக்கும் இரகசியங்களை புரிந்து கொள்ள முடியாமல் ஆண்கள் பித்துப்பிடித்து சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
அந்த கண்களில் இருக்கும் கருவிழிகள் சாதாரணமானவை அல்ல அவை ஆண்களின் ஆன்மா திருடும் புதைகுழி. ஒருவேளை அந்த கருவிழிகள் தான் பெண்களில் ஆழ்மனதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்து கொள்ள உதவும் வழியா. பெண்களின் ஆழ் மனதிலும். கடலின் ஆழத்திலும் என்ன இருக்கின்றது என ஆராய்ச்சி செய்ய சென்ற ஆண்கள் அனைவரும் அந்த ஆழத்தில் ஆன்மாவாக அழைந்து கொண்டிருக்கின்றார்கள்.
பெண்களின் கண்களை மட்டுமே ஆராய்ச்சி செய்ய தனித்தனியே ஆராய்ச்சி கூடங்கள் உருவாக்கி அந்த கண்களை பற்றி தனியே படிப்பதற்கு ஒரு பட்டப்படிப்பும் உருவாக்கப்பட்டால் நன்றாகத்தான் இருக்கும். அந்த பெண்களின் கண்கள் நம்மை காணும் போது நமது இருதயத்தை இயக்கும் சக்தி அவர்களது இமைகளுக்கு இருக்கின்றது என்பதை உணராத ஆண்களே இல்லை. அப்படி உணராதவன் ஆணாகவே இருக்க முடியாது.
பல்லாயிரம் கோடி செலவுகள் செய்து பிரபஞ்சத்தை ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச இரகசியத்தை கண்டறிய போராடும் அறிவியலாளர்களுக்கு தெரியவில்லை ஒட்டு மொத்த பிரபஞ்ச இரகசியமும் பெண்களின் கண்களில் அடங்கி இருக்கின்றது.
எத்தனை வகையான கண்கள் இவைகளை பார்த்து இரசிக்க ஒரு ஜென்மம் பத்தாது. குவாண்டம் இயற்பியலில் காலம் என்ற ஒன்று உண்மையில் இருக்கின்றதா என அறிவியலாளர்கள் பல கூற்றுகளை முன் வைக்கின்றார்கள்.
நேரம் என்பதும் ஒரு மாயை தான் மனிதன் வாழ்வதற்க்காக அவன் உருவாக்கிக்கொண்ட ஒரு விடயம் தான் நேரம் என்று சிலர் சொல்கின்றார்கள். குவாண்டம் இயற்பியலில் இந்த நேரம் கோட்பாடே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த அறிவியலாளர்கள் சொன்ன கூற்றுகள் அனைத்து எனக்கு அப்போது எனக்கு சுத்தமாக புரியவில்லை.
ஆனால். இந்த கண்களை காணும் போதும் அந்த கூற்றுகள் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று அந்த அனுமானங்களுக்கும். கோட்பாடுகளுக்கும் வலு சேர்க்கும் விதமாக இந்த பெண்ணின் பார்வை ஒரு நிமிடம் அப்படியே நேரத்தை நிறுத்தியது போல் ஓர் உணர்வு.
கண்கள் சாதரணமான ஒரு உறுப்பு அதனை இவ்வளவு மிகையாக பேசுவதற்க்கான காரணம் என்ன என்ற எண்ணம் உங்களுக்குள் எழவில்லை என்றால் தான் ஆச்சரியம். நான் பார்த்த கண்களை நீங்களும் பார்த்தால் தானே உங்களுக்கும் நான் ஏன் இவ்வளவு மிகைப்படுத்துகிறேன் என்று புரியும். ஆக்சிசன் அணுக்களும். கார்பன் டை ஆக்சைடு அணுக்களும். நைட்ரஜன் அணுக்களும்.
ஆர்கான் அணுக்களும் ஒன்றோடொன்று கலந்து காற்று என்ற ஆன்மாவை போதையாக்கும் ஒரு மனநிம்மதி நிகழ்வினை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
கடல் மற்றும் அலைகள் உருவாக்குவதில்லை. இந்த அணுக்கள் அனைத்து ஒன்றோடொன்று கலந்து அலைவடிவமாக வந்து நம் உடலினுள் இருக்கும் அதே ஆக்சிஜன். கார்பன்டை ஆச்டைடு. நைட்ரஜன் அணுக்களோடு ஒன்றோடொன்று மோதி இதோ இந்த மூளைக்கு ஒரு தெய்வீக உணர்வினை கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
ஏன்? எதற்கு என்று தெரியாமல் உருவான பிரபஞ்ச பெருவெடிப்பில் வெடித்து சிதறிய கோள்கள் பலகோடி ஒளியாண்டுகள் தொலைவில் நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மயில்தோகைகளை கொண்டு நிர்வாணமான உடலை வருடியதை போல் இந்த இரவு வேளையும் அதனுடன் இந்த காற்றும் உடலை உளுக்கி ஆன்மாவை அமைதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
நட்சத்திரங்கள் வானில் மட்டும் தெரிவதில்லை. இதோ இந்த பெண்னின் கருவிழிகளிலும் அந்த நட்சத்திர கூட்டங்கள் ஜொலித்துக்கொண்டிருப்பது தெரிகின்றது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இரவு வேளை இவளது இமைகளை காணத்தான் வருகின்றதா என்னவோ.
என்னை பார்? உன்னை பார் என்று அழகான பெண்ணை பார்த்தவுடன் ஆண்கள் தங்களுக்குள் போட்டிப்போட்டுக்கொள்வது போல் இந்த நட்சத்திரங்களும் மாறி மாறி பிரகாசித்து என்னை பார் என்று போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றது. அவளது கருவிழிகளில் அந்த நட்சத்திரக்கூட்டங்கள் மின்னுவதை பார்ப்பதற்கு ஏதோ வைரக்கற்களை அரைத்து கருவிழிகளை அந்த கடவுள் படைத்தது போல் இருக்கின்றது.
எனக்கு ஒரு நம்பிக்கை கடவுளின் இருதயம் கருப்பாகத்தான் இருக்குமென்று காரணம் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும். மன அமைதியை தருவதும் இருள் தான். அப்படிப்பட்ட கடவுளின் மார்பை பிளந்து இருதயத்தை அறுத்து வெளியே எடுத்து அந்த கரிய இரத்தத்தை பிழிந்து அதனோடு காந்தத்தன்மை கொண்ட மெக்னீசியம் அதிகாமக உள்ள கிரகத்தை நொறுக்கி.
அந்த கடவுளின் கரிய இரத்தத்தோடு இந்த மெக்னீசியம் கிரகத்துகள்ளை ஒன்று சேர்த்து. சிறிதளவு நியூட்ரான் நட்சத்திரங்களின் மையப்பகுதியில் இருக்கும் ஆற்றலை சிறிதளவு எடுத்து மூன்றையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஜொலிக்கக்கூடிய கருப்பு நிறத்தை உருவாக்கி இந்த பெண்ணின் புருவங்களை படைத்தது யார் என்று தான் தெரியவில்லை.
கண்ணிமைகளிலும் சிறிதளவு அந்த வசியம் இருக்கத்தான் செய்தது. இப்படிப்பட்ட கண்களை நான் எப்படி மிகைப்படுத்தி பேசாமல் இருக்க முடியும்.
அந்த கண்களை ஒருவன் தத்ரூபமாக வரைய முயற்ச்சி செய்துகொண்டிருக்கின்றான். 24×24 இன்ச் கேன்வாஸில் ஆயில் பெயிண்டுகளை வைத்து அந்த கண்களை வரைந்து கொண்டிருக்கின்றான். அந்த பெண் அவனுக்கு எதிரில் நின்று கொண்டிருக்கின்றாள்.
நிலவு அவன் படம் வரைவதற்கு உதவுவதற்க்காக வெளிச்சத்தினை கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த பெண்ணின் முகம் தேவைதகளின் மேலாடை போன்ற வெண்ணிற துணியால் மூடப்பட்டிருந்தது. அவளது கண்கள் மட்டுமே தெரிந்தது அதனை அவன் வரைந்து கொண்டிருந்தான். அடர்ந்த தாடியுடன் பார்ப்பதற்க்கு சற்று முரடன் போல் அவன் உருவம் காட்சியளித்தாலும் அவனது கைகள் மிருதுவாக அந்த பெண்ணின் கண்களை வரைந்து கொண்டிருந்தது.
நிலவு அந்த ஓவியத்தை அவன் வரைந்து முடிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தது. நிலவினை காலை எக்கினால் எட்டிப் பிடித்துவிடலாம் அவ்வளவு உயரத்தில் தான் நிலவு இருந்தது. நிலவினை நெருங்குமளவிற்க்கு அவர்கள் ஒரு மலை உச்சியின் மீது இருந்தார்கள். இங்கே தான் அந்த ஆன்மாவினை அப்படியே உடலினுள் புகுந்து கழுவிச் செல்லும் காற்று வீசிக்கொண்டிருக்கின்றது.
அவன்: கொஞ்சம் உங்க முகத்த காமுச்சா நல்லா இருக்குமே.
என்று அவன் தனது ஆழமான குரலில் பேச.
அவள்: கிட்ட வந்து நீங்களே பாருங்க.
என்று இரவில் வண்டுகளின் அருமையான ரிங்காரத்தோடு அவளது குரலும் இனிமையாக கேட்டது. அந்த பதிலை கேட்டவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் பெயிண்டை அருகில் வைத்து விட்டு தனது வெறும் பாதங்களால் ஈரமான புற்களை மிதித்து நடந்து சென்றான்.
அந்த புலன்களின் மீதிருந்த பனித்துளி அவனது வெண்ணிற பாதங்களை வருட காற்று அவனது தலைமுடியை வருட மெல்ல அந பெண்ணின் அருகே நின்றான். அந்த கடவுள் வாழும் கருவிழிகளை பார்த்துக்கொண்டே அவளது முகத்தினை மூடியிருந்த துணியை கழட்ட முயற்ச்சி செய்தான். ஆனால். அவன் கிட்டே வர வர அந்த பெண் பின்னே நகர்ந்து கொண்டே இருந்தான்.
இப்படியே நடந்து அவள் மலையின் உச்சியில் கீழே 200 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தாள். அவனது இருதயத்துடிப்பு இவளது இமைகளால் இருமடங்கானது கடவுளை நேரில் பார்க்கபோகும் அனுபவம் போல் அவனுக்கு இருந்தது. அவளது முகத்தினை மறைந்திருந்த துணியில் கைவைக்கும் பொழுது அவள் சற்றே இடது பக்கம் விலக அவன் பாதம் தடுமாறி அப்படியே அந்த பள்ளத்தில் கவிழ்ந்தான்.
“இது தான் அழகில் ஆபத்து இருக்கின்றது என்பதோ” என்று கீழிருந்து மேலே அந்த பெண்ணின் கண்களை பார்த்துக்கொண்டிருந்தான். புவியீர்ப்பு விசை அவனது உடலை வேகமாக கீழே இழுத்துக் கொண்டிருந்தது.
திடீரென்று கண்களை விழித்து பார்த்தான். அவன் கண்டது கனவு என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கனவு நிஜ வாழ்க்கையை விட மிகவும் நிஜமாக இருந்தது. அப்படியே மெல்ல தனது வெள்ளை சாம்பல் நிற பெட்ஷீட் போர்த்தப்பட்டிருந்த பெட்டின் மீதிருந்து எழுந்தான்.
ஒரு நிமிடத்திற்க்கு அறுபதில் இருந்து 100 முறை சராசரியாக துடிக்கும் இருதயம் அதை விட அதிகமாக துடித்துக்கொண்டிருந்தது. அவன் உடல் முழுவதும் வியர்வை வழிந்தோடியது.
அந்த அமைதியான அந்தகார பெட்ரூமில் “லப்டப்” என்ற இருதயத்தின் ஓசை காற்றில் உள்ள அணுக்களோடு மோதி அலை வடிவமாக மாறி அவனது காதுகளுக்குள் சென்று உள்ளே இருக்கும் செவிப்பறைகளை செல்லமாக வருடி மூளைக்கு செல்லும் நியூரான் நரம்புகளுக்கு “லப்டப்” என்ற சத்தத்தை உணரவைத்துக்கொண்டிருந்தது.
அவனது இருதயத்துடிப்பை தவிர்த்து அவன் வேறு எதுவும் உணரவில்லை. அந்த பெண்ணின் கண்களும் இருதயத்துடிப்பின் ஓசையும் அவனது இடது பக்க மூளையையும். வலது பக்க மூளையும் ஒன்றினைந்து அவன் அந்த கண்களை பற்றி நினைக்கும்போதெல்லாம் இருதயத்துடிப்பை அதிகமாக்குமாறு ஒரு நியாபகத்தை அவனது மூளை தரவினை சேகரிப்பது போல் மூளையினுள் சேகரித்து வைத்தது. அப்படியே எழுந்து ஆபீஸிற்க்கு கிளம்ப தயாரானான்.
மாலை நேரம் காலை வேட்டையாட சென்ற விலங்குகளும். இறைதேட சென்ற பறவைகளும். வேலைக்கு சென்ற மனிதர்களும் வீடு திரும்பும் நேரம். மாலை நேரம் எப்பொதும் ஒரு மயக்கம் தான். உயிர்களை ஒன்றினைக்கும் ஒரு உன்னதமான தருணம் இந்த மாலை நேரம்.
ஆனால். பாவம் இந்த மயக்கும் மாலைப்பொழுதினை இரசிக்க முடியாமல் பலர் “நைட் ஷிஃப்ட்” சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஐடி. கார்ப்பரேட் கம்பெனிகள் தான் செருப்பால் அடித்தது போல் ஒன்றை புரிய வைக்கின்றன நாம் இன்றளவும் சுதந்திரம் அடயவில்லை. வெள்ளைக்காரன் “Business Outsourcing” என்ற பெயரில் நம்மை இன்றும் அடிமையாக வைத்து ஆண்டு கொண்டிருக்கின்றான்.
உலகில் மிகக்கொடிய விசயம் ஒரு மனிதன் தான் அடிமையாக இருக்கின்றான் என்பதை உணராமல் இருப்பது தான். அது ஒரு புறம் இருக்கட்டும் வாருங்கள் நாம் இந்த மனதை மயக்கும் மாலைப்பொழுதினை இரசிப்போம். வாழ்க்கை என்பது மனிதன் ஒவ்வொரு கணமும். இரசித்து இரசித்து வாழ படைக்கப்பட்டது. இங்கே யாரும் வாழ்க்கையின் அர்த்தமே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால். வாருங்கள் நாமாவது இந்த வாழ்க்கையை வாழுவோம்.
பறவைகள் தங்களது கூடுகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன. சூரியனில் இருந்து நெருப்பு குழம்பையும். சந்திரனில் இருந்து வெள்ளை நிற நிலாக்கற்களையும் எடுத்து நன்றாக அரைத்தால் இந்த மனதை மயக்கும் மாலை நிறம் வந்துவிடும். கடவுள் இந்த மாலைநேரத்தை அப்படி வரைந்திருக்கின்றான். அதில் எவ்வளவு வித்யாசமான பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல் தான் கீழேயும் மனிதர்கள் மொழி. இனம். பணம் என்று பலவிதமாக இருக்கின்றார்கள். ஆனால். இந்த மாலைநேரம் உயிர்கள் அனைத்தும் ஒன்றே என புரியவைக்கின்றது. ஏனென்றால் அனைத்து உயிர்களும் மாலைநேரம் வீடுகளுக்குதான் திரும்புகின்றன. பறவைகள். விலங்குகள் என்ற பாகுபாடு இயற்கை அன்னைக்கு கிடையாது அனைவரும் அவளது செல்லப்பிள்ளைகள் தான்.
“உம்பா” கெட்ட வார்த்தை அல்ல இது ஆப்பிரிக்க மொழியில் சாப்பிட வாருங்கள் என்று பொருள். ஆப்பிரிக்க மொழியில் இதற்க்கு அர்த்தம் இதுவென்றாலும் Etymology முறைப்படி இந்த வார்த்தையின் மூலம் கும்பா என்ற வார்த்தையில் இருந்து உருவானது. கும்பா என்றால் கும்பத்தை குறிக்கும்.
கும்பம் என்பது பெண்ணின் கர்ப்பப்பையை கலசத்திலும் ஆணின் ஆணுறுப்பை தேங்காயை கொண்டு உருவகப்படுத்தும் உயிர்களின் உருவாக்கத்தை விவரிக்கும் ஒரு தத்துவம் தான் கும்பம். ஆணும். பெண்ணும் இணைவது தான் கடவுள் நிலை அனைத்து மதக்குறியீடுகளும் அதனைத்தான் மறைமுகமாக சொல்கின்றது.
இந்த பெயர் வைக்கப்பட்டிருந்த ஆறாவது அடுக்கு மாடியில் அமைந்திருந்த Roof top bar-ல் நீல நிற எல்யீடி விளக்குகளுக்கு மத்தியலும் மஞ்சள் நிற விளக்குகளை சுற்றிலும் அவன் தனியே அமர்ந்து 500 மில்லி கண்ணாடி டம்ளரில் நுரைத்துக்கொண்டிருந்த கார்பன்டை ஆச்டைடு அணுக்கள் அங்குமிங்கும் வாயு வடிவமாக அந்த திரவத்தினுள் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தான்.
பாடல்கள் எதுவும் போடாமல் அமைதியாக இருந்தது ஏனென்றால் மணி மாலை 7 தான் ஆனது. ஒன்பது மணிக்கு மேல் தான் டிஜே வருவாராம் கூட்டமும் அப்போது தான் வருமாம். அந்த இலியான இடுப்புபோல் இருந்த குவளையினை பிடித்தான் பெண்ணின் இடுப்பினை பிடித்தால் ஏற்படும் ஒரு துடிப்பினை அந்த ஜில்லென்ற குவளை அவனுக்கு ஏற்படுத்தியது. தனது ஃபோனில் ஏதொவொரு யூடியூபில் வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தான்.
அதில் கண்ணாடி அணிந்து ஒரு நபர் பேசிக்கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு மனோதத்துவ நிபுணர் போல் இருந்தார். அவரது முகம் சரியாக தெரியவில்லை. அவர் ” மூளைக்கு உண்மை எது பொய்யெது புருஞ்சுக்கற சக்தி அவ்வளவாக கிடையாது. இப்போ ஒரு நிமுஷம் கண்ண மூடுங்களேன். ஒரு ரவுண்டான ஆரஞ்சு பழத்த நினச்சுக்கோங்க. நல்ல ஆரஞ்சு நிறம்.
அதோட தோல நீங்க உங்க விரலால உரிக்கிறிங்க. (அவன் எதிரில் யாரோ வந்து அமர்ந்தார்கள். அதனை கண்டுகொள்ளாமல் கண்களை மூடி அவர் சொல்வது அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.) அந்த ஆரஞ்சு பழத்தோட தோல நீங்க பிழியுறிங்க அந்த பழத்த எடுத்து உங்க வாயில போடுறிங்க.
இத கற்பன பண்ண நிறைய பேருக்கு வாயில எச்சி ஊற ஆரம்பிச்சிருக்கும் சிலர் ஆரஞ்சோட டேஸ்டையே உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கு. நாம் உண்மையென்று நினைக்கும் அனைத்தும் உண்மையல்ல இந்த பிரபஞ்சம் அடிப்படையில் அணுக்களால் கட்டமைக்கப்பட்டது. எது உண்மை? எது பொய்? என்று யாராலும் இதுவரை சொல்லமுடியவில்லை.
ஆனால். எல்லாம் மாயை என்பது மட்டும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து தான். நீங்க இப்போது இருக்குறதுக்கூட நீங்க வேற எங்கோ இருந்து காணுற கனவாகக்கூட இருக்கலாம் என்று அவர் பேசியக்கேட்டு சற்று தெளிவாக இருந்தவன் மிகவும் குழம்பிப்போனான்.
அப்படியே தனது செல்ஃபோனில் இருந்து தலையை மேலே தூக்கி இடது பக்கமிருக்கும் கூட்டத்தை பார்த்தான் பெங்களூரில் குழந்தைகளை கூட்டிக்கொண்டே குடிக்க வருகிறார்கள் என்பதை பார்த்து வியக்காமல் பல தடவை பார்த்தவன் போல் சலித்தான். வலது பக்கம் காதல் ஜோடிகள் முற்றிலும் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தில் மூழ்கி காணாமல் போனதை பார்த்துக்கொண்டிருந்தான்.
தனக்கே எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பதை அப்போது தான் உணர்ந்தான். கண்களை விரித்து யாரென்று பார்த்தான் அதிர்ச்சியில் உறைந்து போனான் “அதே கண்கள்”. அவனது இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. இது கனவா? நினைவா என்று புரியாமல் சுற்றிலும் ஆப்பிரிக்க காட்டுவாசிகளின் முகமூடிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்த மஞ்சளும். நீலமும் கலந்த அந்த பாரை பார்த்துக்கொண்டிருந்தான். இது கனவா? நினைவா? என்று தெரியாமல் அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தான்.
அந்த பெண் யாரோடோ வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தாள். அவள் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தது அவனுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. வேகமாக எழுந்து கருப்பு நிற டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்த தளத்தில் தனது ப்ரெவுன் நிற ஆக்ஸ்போர்டு ஷூவால் டப் டப் என்று நடந்து கழிவறைக்குள் சென்று. முகத்தில் தண்ணீரை வாரிஇரைத்தான்.
சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தனது டேபிளுக்கு திரும்பினான். அவள் எதிரே அமைதியாக உட்கார்ந்தான். அவளுக்கும் பீர் கொண்டுவந்து வைக்கப்பட்டது. வீடியோ காலை கட் செய்துவிட்டு பீரை குடித்தாள். மிகவும் ஜில்லென்று இருந்ததால் அவள் அப்படியே கீழே வைத்தாள். அவன் தனது ஹனி சிக்கன் விங்ஸை அவளுக்கு நீட்டினான்.
அவன்: எடுத்துக்கோங்க. இங்கே சரக்கு சீக்கிரம் வந்திடும். சைட் டிஷ் வர ரொம்ப லேட் ஆகும்.
அவள் ஒரு நிமிடம் தன்னை பார்த்தவுடன் வழியும் அனைத்து ஆண்கள் சமுதாயத்தையும் பார்த்து கேவலமாக பார்ப்பது போல் பார்த்தாள். ஆனால். அவனது கண்கள் அவளது கண்களை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை என்பதை அவளது கண்கள் அவளுடைய மூளைக்கு சொல்ல. அவனை பார்த்தவுடனே ஒரு நல்ல அபிப்பிராயத்தை அவள் மனதினுள் ஏற்படுத்தியது.
அவன்: பயப்புடாதிங்க. இதுல எதுவும் கலக்கல.
என்று சொன்னவுடன் அவள் மெல்லிய புன்னகை பூத்தாள். அப்படியே ஒரு சிறிய சிக்கன் பீசை வாயில் எடுத்துப்போட்டாள். ஒருவகையான இனிப்பு சுவையும். காரமும் சேர்ந்து வித்யாசமான சுவையாக அது இருந்தது. அது அவளுக்கு பிடித்திருக்கின்றது என அவளது கண்களை பார்த்தவுடனே தெரிந்தது.
அவள்: பீயர் இவ்வளவு கூலிங்கா நான் குடுச்சது இல்ல. ரொம்ப தேங்க்ஸ்ங்க. நான் தமிழ்ன்னு எப்படி கண்டுபிடிச்சிங்க.
என்று தனது விரல்களில் ஒட்டியிருக்கும் அந்த சிக்கனின் சுவையை ருசித்துக்கொண்டே கேட்க.
அவன்: வீடியோ கால் பேசிட்டு இருந்திங்கள அத வச்சுதான்.
என்று டீஸ்யூவை நீட்டினான்.
அவன்: ஐ யம் இராவணன்.
அவள்: ஐயம் அணு.
என்று இருவரும் உரையாடத்தொடங்கினார்கள். ஆளுக்கு மூன்று பியர்கள் மேல் முடிந்து விட்டது. இருவரும் தங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரையும் யாராவது பார்த்தால் இவர்கள் தற்போது சந்தித்தவர்கள் போல் யாருக்கும் தெரியாது. இருவரையும் பார்பதற்கு பல வருடங்களாக காதலிப்பவர்கள் போல் தான் தோன்றும்.
நம் வாழ்விலும் இம்மாதிரியான நிகழ்வு நடந்திருக்கும். நமக்கு யாரென்றே தெரியாத ஒருவரிடம் பேச ஆரம்பிப்போம் ஆனால். அவர்களிடம் பல வருடங்களாக நாம் பழகியதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். பின்னால் பாடல் போட்டு பலர் ஆடிக்கொண்டிருப்பது கூட தெரியாமல் சுற்றியிருப்பதை மறந்து அவளது கண்களில் அவன் கரைந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அது போன்ற ஒரு உணர்வு தான் இராவணனுக்கும்.
அணுவிற்கும். இருவரும் பேச ஆரம்பித்ததில் மணி பன்னிரெண்டானது தெரியவில்லை. மூன்று பியர்களுக்கு மேல் போனாலும் இருவரும் அவ்வளவாக போதையாகாமல் சற்று தெளிவாகத்தான் இருந்தார்கள். எப்படி சொல்கிறேன் என்றால் பில் வந்தவுடன் தெளிவாக கணக்குப்போட்டு இருவரும் பணத்தினை சரிபங்காக கொடுத்து விட்டு பாரினை விட்டு கீழே வந்தார்கள்.
இந்த இரவு இராவணனுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. பெங்களூரூம் ஓயாத ட்ராஃபிக்கில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது.
இராவணன்: உங்க ரூம் எங்க இருக்கு.
என்று அணுவை பார்த்து கேட்க.
அணு: இங்கிருந்து பக்கம் தான் நடந்தே போகலாம். நான் PG – ல தான் ஸ்டே பண்ணிருக்கேன்.
என்று பெங்களூரின் இதமான குளிரில் நடுங்கிக்கொண்டே சொல்ல. இராவணன் தனது ஜெர்கினை எடுத்து அவள் மீது போர்த்தினான். அந காட்சியை பார்ப்பதற்கு ஏதோ அவனது ஆன்மாவின் அன்பினை எடுத்து அவள் மீது போர்த்தியது போல் இருந்தது. இருவரின் கண்களும் ஒருவரையொருவர் பார்த்து பல ஜென்ம நினைவுகளில் பலவிதமான வாழ்க்கைகள் வாழ்ந்ததை பேசிக்கொண்டிருந்தன.
இராவணன்: ரொம்ப லேட் ஆகிடுச்சு வாங்கி உங்க பிஜி-ல நானே விட்டுட்டு போயிடுறேன்.
என்று கடவுள் காற்று வடிவில் வந்து அவளது தலை முடியை வருடுவதை பார்த்து தன்னால் வருடமுடியவில்லையே என்ற ஏக்கத்தோடு.
அணு: இல்ல நீங்க போங்க. நான் போய்டுறேன்.
என்று என்னுடன் வா என்ற இருதயத்தின் ஆசையிடமும். வேண்டாம் என்ற மூளையின் பயத்தினடமும் போராடிக்கொண்டே.
இராவணன்: ஏங்க நான் என்ன என் ரூம்க்கா கூப்பிட்டேன். உங்க ரூம்ல தான விட்டுட்டு போறேன்னு சொன்னேன். சனிக்கிழம நைட் வேற எவன் எந்த போதைல சுத்துவான்னு தெரியாது.
என்று அவளோட வாழ்க்கை தான் நடத்த முடியாது போகும்வரை வழியிலாவது நடக்கலாம் கேட்க. அணு மெளனம் சம்மததிற்க்கு அறிகுறி என்ற பெண்களுக்கு உரிய பாசையில் சம்மதம் தெரிவித்தாள். இருவரும் பெங்களூரின் இதமான இரவில் தனியே நடந்து கொண்டிருந்தார்கள். அவள் ஹீல்ஸ் அணிந்து நடக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள்.
அவளது ஹீல்ஸ் செருப்பை அவன் கையில் அவள் எவ்வளவு தடுத்தும் எடுத்துக்கொண்டான். ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இந்த காட்சியை வானில் இருந்து பார்த்து இரசிப்பதால் தான் என்னவோ இந்த இரவு இவ்வளவு பிரகாசமாக இருக்கின்றது. இருவரும் பேசிக்கொண்டே ஆரஞ்சு நிற தெருவிளக்கு ஒளியில் அரவமற்ற தெருவில் இதமான பனியில் நடந்து அவளது பிஜியை வந்தடைந்தார்கள்.
இராவணன்: சரிங்க அப்போ நான் கிளம்புறேன்.
என்று அவளை விட்டு போகாதே என்ற இருதயத்தின் ஏக்கத்தை அடக்கிக்கொண்டு.
அணு: ஒரு நிமிஷம். நீங்க ஏன் என்னோட ஃபோன் நம்பர் கூட கேட்கல இதுவரைக்கும்.
என்று தனது முட்டிவரை அணிந்திருந்த வெள்ளைநிற ஸ்கர்ட்டை தடவிக்கொண்டே கேட்டாள்.
இராவணன்: கேட்கனும்ன்னு தோனால.
என்று அவளது கண்களை பார்த்துக்கொண்டே பாதி உண்மைய சொல்ல.
அணு: அப்போ என்ன பிடிக்கலையா?
என்றாள் விளையாட்டாக.
இராவணன்: உங்களுக்கு நம்பிக்கையிருந்தா நீங்களே கொடுத்துருப்பிங்க. எனக்கு இந்த முமெண்ட் உங்க கூட இருக்கது ரொம்ப பிடுச்சிருக்கு. லைஃப் லாங் இது வருமான்னு தெரியாது. எதுக்கு தேவையில்லாத ஆசைய வளத்து ரெண்டு பேரும் கஷ்டப்பட்டுக்கிட்டு. இந்த முமெண்ட் போது எனக்கு பல வருஷம் சந்தோசமா இருப்பேன். இத நினச்சு பார்த்து.
என்றான் விளையாட்டாக கேட்ட வார்த்தைகள் அவளது மனதை சிறிதளவு புன்படுத்தும்படி. அப்படியே சொல்லிவிட்டு அங்கிருந்து ஒரு புறப்பட்டான். அவன் போகும் போது ” மிஸ்டர். இராவணன்” என்று அவள் கூப்பிடமாட்டாளா என்ற அவனது ஏக்கத்தை போக்கியது அவளது குரல்.
அணு: உங்க நம்பர் சொல்லுங்க மிஸ்டர்.
என்று புன்னகை. வெட்கம். ஆசை. கனவு. நம்பிக்கை. பயம் என்ற அனைத்து உணர்வுகளும் ஒன்று சேர அவள் கேட்க அதே உணர்வுகளோடு அவனும் நம்பரை கொடுத்தான். அவனது ஜாக்கெட்டை போட்டுக்கொண்டே அவன் இருட்டில் மெல்ல மறைவதை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கும் அந்த ஜாக்கெட்டை கொடுக்க மனமில்லை அவனுக்கும் அதை வாங்க மனமில்லை.
காதலில் கரைந்தவர்களுக்கு காலம் என்பது எப்படி கரையும் என்பது சுத்தமாக தெரியாது. இருவரும் பேசிப்பழக தொடங்கி மூன்று மாதங்கள் எப்படி ஓடியது என்று அவர்களுக்கும் தெரியவில்லை இந்த கதையை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் தெரியவில்லை.
ஒரு நாள் இருவரும் “The fault in our starts” என்ற திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துக்கொண்டிருக்கும்போது. இராவணன் மெல்ல அவளது காதருகே சென்று “If you don’t mind can I hold your hand” என்று கேட்க அவள் கைகளை கோர்த்து சம்மதம் கூறினாள்.
அப்படியே அவள் அப்பாடா என்று அவனது தோளில் சாய்ந்தாள் அவன் மெல்ல அவளது நெற்றியில் ஆழமான முத்தமிட்டு ஆறுதல் முத்திரை பதித்தான். அவனது விரல்கள் அவளது தலைமுடியை ஆறுதலாய் கோத இதழ்கள் கன்னங்களில் முத்தமிட ஆரம்பித்தது.
அணு: என்ன உன் ரூம்க்கு கூட்டிட்டு போறியா?
என்று கேட்ட அடுத்த தருணமே அவளது கையைபிடித்து அப்படியே எழுப்பினான். இருவரும் அவனது எட்டாவது மாடியில் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்க்கு வந்தார்கள். அவனது ரூம் கதவை திறந்து லேடிஸ் பர்ஸ்ட் என்று கையை உள்ளே நீட்டினான். அவள் உள்ளே வந்து வீட்டினை பார்ததுக்கொண்டிருக்கும் முன்னே அவளை பின்னால் இருந்து கட்டியணைத்தான் இராவணன். அவளது தலை முடியை அவள் காதுகளுக்கு பின்னால் சொருகி மெல்ல அவள் காதருகில் வந்து.
இராவணன்: பிடுச்சுருக்கா?
என்று கேட்க அவள் பின்னால் இருந்தே தனது கையை அவனது கன்னத்தில் வைத்து.
அணு: ரொம்ப
என்று சொல்லி முடிப்பதற்குள் அவளை பிஸ்தா நிற சுவற்றில் சாய்த்தான். மெல்ல அவளது தலைமுடியை மெல்ல கோதினான். இதழும். இதழும் இணையாமல் இடைவெளியில் இருந்தது.
-தொடரும்.
உங்களுக்கு இந்த கதை பிடித்திருப்பின். இது மாதிரியான. எங்கும் வெளியிடப்படாத எனது கதைகள் மற்றும் கவிதைகள் இ-புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கீழுள்ள இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
ravan. poet1@gmail. com
இப்படிக்கு.
இராவணன்.